×

2 நாளாக ரயில்வே கேட்டை திறக்காத கேட் கீப்பரை கண்டித்து மக்கள் மறியல் தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சை, அக். 9:  தஞ்சை அருகே தன்னை தாக்கிய 2 பேரை கைது செய்யக்கோரி நேற்று 2வது நாளாக ரயில்வே கேட்டை கேட் கீப்பர் திறக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ரயில் மறியலில் ஈடுபட்டனர்.தஞ்சை அடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. கடந்த 6ம் தேதி இரவு இந்த கேட்டில் வடமாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் மீனா என்பவர் கேட்கீப்பராக பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேருக்கும், அர்ஜூன் மீனாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அர்ஜூன் மீனாவை தாக்கி விட்டு 2 பேர் தப்பி சென்றனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


இந்நிலையில்  தாக்கிய 2 பேரை கைது செய்யாததை கண்டித்து வண்ணாரப்ேபட்டையில் உள்ள ரயில்வே கேட்டை நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு அர்ஜூன் மீனா மூடினார். இதனால் பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தது போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். ஆனால் கேட் கீப்பர் அர்ஜூன் மீனா தன்னை தாக்கிய 2 பேரை ைகது செய்தால் மட்டுமே ரயில்வே கேட்டை திறப்பேன் என்று கூறிவிட்டார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி வரை ரயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருச்சி- காரைக்கால் பாசஞ்சர் ரயிலை வண்ணாரப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போலீசார் சென்று  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரயில்வே கேட்டை இன்றுக்குள் (9ம் தேதி) ரயில்வே நிர்வாகத்திடம் பேசி திறப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 45 நிமிடம் தாமதமாக பாசஞ்சர் ரயில் புறப்பட்டு சென்றது.இதுகுறித்து கேட்கீப்பர் அர்ஜூன் மீனா கூறுகையில், என்னை தாக்கிய 2 பேரை கைது ெசய்தால் தான் ரயில்வே கேட்டை திறப்பேன். மற்றபடி யார் வந்து சொன்னாலும் ரயில்வே கேட்டை திறக்க மாட்டேன் என்றார். ரயில்வே கேட்டை மூடி 2 நாட்களாகியும் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் வந்து கேட் கீப்பரிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.



Tags : Kate Cheppar ,Tanjore ,
× RELATED தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய இரண்டு...